ஹிமாசலப் பிரதேசம் தொடர்ந்து கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இந்த பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.
பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாச்சலில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. தொடர் மழை வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 197 பேரும், சாலை விபத்துகளில் 163 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி வெளியிட்ட அறிக்கையில், மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் (NH-03, NH-305, NH-505) உள்பட 1,001 சாலைகளில் நிலச்சரிவு, மண்சரிவு, திடீர் வெள்ளம் காரணமாக தடைபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,992 மின் விநியோக மின்மாற்றிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் 472 நீர் வழங்கல் திட்டங்கள் செயல்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பல மாவட்டங்களில் சாலைகள் தடைச் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், ஆலோசனைகளுக்கு இணங்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுப்பணித் துறை, ஹிமாச்சலப் பிரதேச மாநில மின்சார வாரியம் மற்றும் நீர் வழங்கல் வாரியம் போன்ற துறையை மறுசீரமைப்பு செய்யவும் 24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தொடர் மழை மற்றும் நிலச்சரிவுகளால் தாமதங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, ரூ.3,780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான சேதங்களை விளைவித்துள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் சுக்விந்தா் சிங் சுக்கு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.