ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி 
இந்தியா

சிசோடியாவை தொடர்ந்து பகவந்த் மானை நலம் விசாரித்த ஹரியாணா முதல்வர்!

ஹரியானா முதல்வர் நயாப் சைனி பகவந்த் மானை மருத்துவமனையில் சந்திந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

51 வயதான பகவந்த் மான், செப்டம்பர் 5 ஆம் தேதி சோர்வு, குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, முதல்வர் பகவந்த் மானின் முக்கிய உடல் இயக்கங்கள் இயல்பாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக உடல்நலக் குறைவால் முதல்வர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார். ஆனால் உடல்நிலை பிரச்னை காரணமாக முதல்வர் பகவந்த் மானால் அவருடன் செல்ல இயலவில்லை.

இந்த நிலையில், ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, மொஹாலியின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பகவந்த் மானை சந்தித்து அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

Haryana Chief Minister Nayab Singh Saini met his Punjab counterpart Bhagwant Mann at a private hospital in Mohali and enquired about his health on Monday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டினுள் புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகைகள் பறிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கையை திருடிய பணியாளா் கைது

மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!

மாணவிக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

SCROLL FOR NEXT