ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம்!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...
ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுன்ரில் பயங்கரவாதி ஒருவர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வுத் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தலைமையில் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து தேடுதல் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
அப்போது ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் இந்திய ராணுவத்தின் இளநிலை கமிஷண்டு அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A terrorist was killed in an encounter with security forces in Jammu and Kashmir on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.