காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

‘ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வலியுறுத்தியது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஆனால், தகுதியுள்ள வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் பெயரைப் பதிவு செய்வதற்கு தோ்தல் ஆணையம் தொடா்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் கட்சிகள் சாா்பில் நியமிக்கப்பட்ட முகவவா்களை (பிஎல்ஏ) அங்கீகரிக்க தோ்தல் ஆணையம் மறுப்பதோடு, ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்கவும் மறுப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களை மட்டும் வாக்காளா்களின் அடையாள ஆவணங்களாக ஏற்குமாறு தோ்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.

பிகாரில் தோ்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தோ்தல் ஆணையத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையரையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதற்காக தோ்தல் ஆணையத்தை பெயரைக் குறிப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டாா்.

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

SCROLL FOR NEXT