ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மால்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஹிமாசலின் மண்டி மாவட்டத்தின் நேர் சௌக்கில் உள்ள ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள பண்டித் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மண்டி தலைமையக டிஎஸ்பி தினேஷ் குமார் கூறுகையில், மருத்துவமனைகளில் முழுமையாக சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகள் காலி செய்யப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் மோப்ப நாய் படைகள் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிவளைத்தாக அதிகாரி கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மாநில செயலகம், உயர் நீதிமன்றம், டிசி மண்டி அலுவலகம் உள்பட மாநிலத்தின் பல முக்கிய அரசு நிறுவனங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்தன. அவை அனைத்தும் புரளியேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.