ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!
ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!
நடிகை கரிஷ்மா கபூரின் வாரிசுகள் ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மறைந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர் - கரிஷ்மா கபூர் தம்பதியின் மகள் சமைரா, மகன் கியான், சஞ்சய் கபூரின் சுமார் ரூ. 30,000 கோடியிலான சொத்துகளில் பங்கு வேண்டும் என்று இன்று(செப். 9) தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கரிஷ்மா கபூரின் முன்னால் கணவரான சஞ்சய் கபூருடன் கரிஷ்மா விவகரத்து பெற்றுவிட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து சஞ்சய் கபூர் ப்ரியா சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே, சஞ்சய் கபூர் கடந்த ஜுன் 12-இல் பிரிட்டன் சென்றிருந்தபோது காலமானார்.
Advertisement
Advertisement
Actor Karisma Kapoor's kids move Delhi HC for share in late father's assets
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.