ஜெய்ராம் ரமேஷ்  கோப்புப் படம்
இந்தியா

பாஜகவுக்கு தார்மீக தோல்வி; சித்தாந்தப் போர் தொடர்கிறது - காங்கிரஸ்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எண்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜகவுக்கு தார்மீக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோல்விதான் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எண்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜகவுக்கு தார்மீக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோல்விதான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன.

எதிர்க்கட்சிகளின் செயல்திறன் சந்தேகத்திற்கு இடமின்றி மரியாதைக்குரியதாக இருந்தது.

கூட்டணி வேட்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். 2022 இல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தன.

பாஜகவுக்கு எண்கணித முறையில் வெற்றி என்றாலும், உண்மையில் தார்மீக மற்றும் அரசியல் இரண்டிலும் தோல்விதான். சித்தாந்தப் போர் குறையாமல் தொடர்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: செப்.12-ல் குடியரசு துணைத் தலைவராகிறார்?

Jairam Ramesh calls NDA's win a moral setback

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT