நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டம் கலவரமாக உருவான நிலையில், அந்நாட்டின் நிர்வாகம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லி மற்றும் காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும், இன்று (செப்.10) ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தின் வன்முறைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நேபாளத்தின் வன்முறையால் காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.