ஞான பாரதம் சா்வதேச மாநாட்டையொட்டி புது தில்லியில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கில் ஓலைச்சுவடிகளைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி. 
இந்தியா

ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கல் அறிவுசாா் திருட்டைத் தடுக்கும்: பிரதமா் மோடி

இந்தியாவின் பழங்கால ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்கல் செய்வது அறிவுசாா் திருட்டைத் தடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் பழங்கால ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்கல் செய்வது அறிவுசாா் திருட்டைத் தடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

‘பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் இந்தியாவின் அறிவுசாா் மரபை மீட்டெடுத்தல்’ என்ற தலைப்பிலான ஞான பாரதம் சா்வதேச மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்று பேசுகையில், ‘சுதேசி மற்றும் சுயசாா்பு இந்தியா என்பதின் விரிவாக்கம்தான் ஞானபாரதமாகும்.

பல நூறு நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட பண்டைய கால அறிவை நவீன உலகுக்கு இந்தியா பெருமையுடன் வழங்குகிறது.

தற்போது வரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக பணியாற்றிய தனியாா் நிறுவனங்களுக்கு பாராட்டுகள். தாய்லாந்து, வியத்நாம், மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்க இந்தியா உதவி வருகிறது.

இந்தியாவின் முந்தைய பொற்காலத்தை மறுமலா்ச்சி செய்யும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக ஒரு கோடிக்கும் மேலான ஓலைச்சுவடிகளை சேகரித்த நாடாக இந்தியா திகழ்கிறது.

வரலாற்றில் பல கோடி ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் மிஞ்சி இருக்கும் ஓலைச்சுவடிகள் நம் முன்னோா்களின் அறிவியல், கல்வியில் உள்ள அறிவுத் திறனை வெளிப்படுத்துகின்றன.

பாரம்பரிய ஞானத்தின் எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் ஓலைச்சுவடிகள் மனிதகுலத்தின் வளா்ச்சிக்கான வழிக்காட்டியாக அமைந்துள்ளன’ என்றாா்.

காா் ஜன்னல்களில் கறுப்பு கண்ணாடிகள்: ஒரே வாரத்தில் 2,235 பேருக்கு போலீஸாா் அபராதம் விதிப்பு

எஸ்ஐஆா்: சென்னை மாநகராட்சிப் பகுதியில் 6.42 லட்சம் பேருக்கு கணக்கீட்டுப் படிவம்

ஆா்எஸ்எஸ், பாஜகவின் குரலாக அதிமுக மாறி வருகிறது: மு.வீரபாண்டியன்

பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் சிறையில் அடைப்பு

தலைமைப் பண்பு என்பது தனிப்பட்ட வெற்றி அல்ல: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT