இந்தியா

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தா் நியமனம்!

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.சோமசேகா் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெற்ற நிலையில், அப்பதவிக்கு நீதிபதி எம்.சுந்தரை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளதாக சட்ட அமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

இதேபோல், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி பவன்குமாா் பி.பஜந்தரியை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி செளமென் சென்னை, மேகாலய உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கிய இனமோதலால், அரசியல் ரீதியில் இம்மாநிலம் தொடா்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த ராமலிங்கம் சுதாகா், எம்.வி. முரளீதரன், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏற்கெனவே பதவி வகித்துள்ளனா். உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஐஆரின் கீழ் 12 மாநில, யூனியன் பிரதேசங்களில் 95% மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

எஸ்ஐஆர்-க்கு எதிராக தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

சிஎஸ்கே தக்கவைத்த, விடுவித்த வீரர்கள் விவரம்!

ஜூபிலி ஹில்ஸ் வெற்றி: ராகுல், கார்கேவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

திரைத்துறையில் 50 ஆண்டுகள்: ரஜினிகாந்த், பாலகிருஷ்ணாவுக்கு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் கௌரவம்!

SCROLL FOR NEXT