முகப்பு
இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் இன்றே கடைசி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றே கடைசி.

Updated On : 15 செப்டம்பர், 2025 at 3:51 AM
கோப்புப்படம்.
பகிர்:

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) முடிகிறது.

அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வருமான வரிக் கணக்கு தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளில் வரி செலுத்துவோருக்கு உதவ, 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

Advertisement

தொலைபேசி அழைப்புகள், எக்ஸ் வலைதளங்கள் மூலமும் வரி செலுத்துவோரின் சந்தேகங்களை வருமான வரித் துறை தீர்த்து வருகிறது.

2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், செப். 15 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், வருமான வரி கணக்கை இன்று தாக்கல் செய்யவில்லையெனில், வருமானத்திற்கு அபராதம் வசூலிக்கப்படும்.

இதனிடையே, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவ. 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தவறான செய்தி பரவி வருவதாகவும், இந்தச் செய்தியில் உண்மை இல்லை எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிவுறுத்தியுள்ளது.

summary

The deadline for filing income tax returns ends today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments