ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மின்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நடத்திய அதிரடி சோதனை மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பினாமி என்று சந்தேகிக்கப்படும் சதீஷ் வீட்டில் இருந்து ரூ.2,18 கோடி ரொக்கத்தையும் பறிதல் செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் மின்துறை உதவி கோட்டப் பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சட்டவிரோதமாகச் சம்பாதித்ததில் செர்லிங்கம்பள்ளயில் ஒரு குடியிருப்பு, கச்சிபவுலியில் ஆறு தளம் கொண்ட கட்டடம், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அம்தார் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம், ஹைதராபாத்தில் ஆறு பிரதான குடியிருப்பு திறந்தவெளி நிலங்கள், நர்குடாவில் 1,000 சதுர அடி விவசாய நிலம், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் உள்பட கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும், அவரது பினாமி என்று சந்தேகிக்கப்படும் சதீஷ் வீட்டில் இருந்து ரூ.2,18 கோடியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிதல் செய்னர்.
அம்பேத்கர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரி மீது ஏற்கனவே ஊழல் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.