பெரியாருக்கு பினராயி விஜயன் புகழஞ்சலி 
இந்தியா

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழஞ்சலி செலுத்தியது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியாரின் சிலைக்கு அரசு சார்பில் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

Kerala Chief Minister Pinarayi Vijayan has posted that Periyar's struggles guide us from generation to generation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT