இந்தியா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

தினமணி செய்திச் சேவை

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிலிருந்து 12.50 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 12.46 கோடி கிலோவாக இருந்தது.

வட இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 7.18 கோடி கிலோவிலிருந்து 7.94 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது. அதேசமயம், தென் இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி 5.28 கோடி கிலோவிலிருந்து 4.56 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில், நடப்பாண்டின் முதல் பாதியில் தேயிலை ஏற்றுமதி ரூ.3,639.45 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3,129.31 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி விலை கிலோவுக்கு ரூ.251.21-லிருந்து ரூ.291.13-ஆக உயா்ந்துள்ளது.

முந்தைய 2024-ஆம் ஆண்டு முழுவதும் இந்தியாவிலிருந்து 25.62 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 23.17 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT