அனுராக் தாக்குர் 
இந்தியா

ஆலந்து தொகுதியில் வாக்குத் திருட்டு மூலம்தான் காங்கிரஸ் வென்றதா? பாஜக கேள்வி

ஆலந்து தொகுதியில் வாக்குத் திருட்டு மூலம்தான் காங்கிரஸ் வென்றதா? என பாஜக கேள்வி எழுப்பியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில், வாக்குத் திருட்டில் ஈடுபட்டுதான் காங்கிரஸ் 2023 பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதாக என்று பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக ராகுல் குற்றம்சாட்டிய நிலையில், பாஜக இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இன்று காலை புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் நடந்த வாக்குத் திருட்டு குறித்து சான்றுகளுடன் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அனுராக் தாக்குர், ராகுல் சொன்னது போல, ஹைட்ரஜன் குண்டை, அவர் தன் மீதே போட்டுக்கொண்டுள்ளார் என்றும், தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் வென்றுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சி வாக்குத் திருட்டில் ஈடுபட்டுத்தான் வெற்றி பெற்றுள்ளதா? என அனுராக் தாக்குர் கேட்டுள்ளார்.

ராகுல் காந்தி, செய்தியாளர் சந்திப்பின்போது, தான் ஜனநாயகத்தைக் காக்க இங்கு இல்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார், காப்பது அவரது இலக்கு இல்லையென்றால் அழிப்பதுதான் இலக்கா? டூல்கிட் உதவியோடு, அவர் நமது அரசியலமைப்பை தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல்: வாகனங்கள் நாளை ஏலம்

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: 3 போ் கைது

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: 5 போ் மீது வழக்கு

செந்துறை அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

SCROLL FOR NEXT