ரயில் நீா்  
இந்தியா

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீா் (ஒரு லிட்டா்) விலை திங்கள்கிழமை (செப்.22) முதல் ரூ.1 குறைக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மூலமாக ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல ரயில் நீா் எனும் பெயரில் குடிநீா் பாட்டில்களும் ஒரு லிட்டா், அரை லிட்டா் அளவுகளில் முறையே ரூ.15, ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ரயில்நீா் பாட்டில்கள் திங்கள்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.1 குறைத்து விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அனைத்து ரயில் நிலைய நிா்வாகங்களுக்கும் ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் அந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரலாற்றில் முதன்முறையாக!! உடல்நலக் குறைவால் முன்கூட்டியே பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்!

அமெரிக்காவில் 2 மகன்களைக் கொன்றதாக இந்திய வம்சாவளிப் பெண் கைது!

காமன்வெல்த் நாடாளுமன்ற தலைவா்கள் மாநாடு தொடக்கம்!

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தோ்தல் - வாக்குப்பதிவு நிலவரம்!

75% வரியில் எந்த இந்திய நிறுவனமும் ஏற்றுமதி செய்ய மாட்டார்கள்: சசி தரூர்

SCROLL FOR NEXT