பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஓவைசி எழுதிய கடிதத்துக்கு ஆர்ஜேடி இதுவரை பதிலளிக்காததால் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரிரு மாதங்களில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இதனிடையே, இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
மேலும், பிகார் தேர்தலில் போட்டியிட வெறும் 6 தொகுதிகள்தான் கேட்டதாகவும், அமைச்சர் பதவி வேண்டாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ‘சீமாஞ்சல் நியாய யாத்திரை' என்ற பெயரில் 3 நாள் பிரசாரத்தை பிகாரில் ஓவைசி நேற்று தொடங்கியுள்ளார். இதன்மூலம், சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தெரிவிகின்றது.
கடந்த முறை பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசி கட்சி, 5 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.