தில்லியில் பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
அப்போது கனமழையால் அண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக மனு ஒன்றையும் ஃபட்னாவிஸ் அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கனமழைக்குப் பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமரிடம் விளக்கமளித்தேன்.
இதுதொடர்பாக மாநில அரசு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும் என்றும் அது ஆக்கபூர்வமாக பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தா ர். தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்த கடன் தள்ளுபடி உறுதிமொழியை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
இதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கடன் தள்ளுபடி குறித்து முடிவெடுக்கும்.
கடன் தள்ளுபடியை மீண்டும் மீண்டும் செய்ய முடியாது, எனவே அதை எப்படி மேலும் பயனுள்ளதாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.