இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று வழியனுப்பு விழா நடைபெறுகிறது.
கடந்த 1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டது மிக் 21 ரக போர் விமானங்கள். அந்த நாள் முதல், இதுவரை சுமார் 1,200 மிக் 21 போர் விமானங்கள் நம் நாட்டைக் காக்கும் பணியை செய்து வந்தன.
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக போர் விமானமாக வானத்தை வட்டமடித்து வந்த மிக் 21 ரக விமானங்கள் ஓய்வு பெறுகின்றன. இதன் மூலம், இன்று, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி, இந்திய விமானப் படையிலிருந்து ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
எப்படி நடக்கும் பிரியாவிடை
இந்த மிக் 21 ரக போர் விமானங்கள் ஆறு, இன்று பகல் 12.05 மணிக்கு விமானப் படை தளபதி மார்ஷல் ஏபி சிங் தலைமையிலான குழுவினரால் சண்டீகர் வான் பரப்பில் பறக்கவிடப்படும். அவை கடைசியாக தரையிறங்கும்போது, அவற்றின் மீது தண்ணீர் தெளித்து மரியாதை செலுத்தப்படும்.
சண்டீகரில் நடப்பது ஏன்?
1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படை தளத்தில் மிக் 21 ரக விமானங்கள் இணைக்கும் நிகழ்வானது இந்த சண்டீகரில்தான் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வானின் காவலன் என்ற அடையாளத்தோடு, விமானப் படையில் சேர்க்கப்பட்ட இந்த மிக் போர் விமானம், கார்கில் போர் முதல், கடைசியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் வரை நாட்டின் எல்லையைக் காக்க பணியாற்றி இருக்கிறது.
ரஷியாவில் உருவாக்கப்பட்டு இந்தியாவால் மேம்படுத்தப்பட்டவைததான், இந்த மிக் 21 ரக போர் விமானங்கள்.
வான் படையில் வலிமை மிக்க நாடாக இந்தியா மிளிர முக்கிய காரணமாக இருந்தது இந்த மிக்21 ரக போர் விமானம். இதற்கு இன்று பிரியாவிடை வழங்கப்படுகிறது.
கெடுபயனாக, அண்மைக் காலமாக ஏராளமான விபத்துகளை சந்தித்ததால் பறக்கும் சவப்பெட்டி என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிக்க... எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம்! யாருக்கெல்லாம் நல்வாய்ப்பு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.