ஜம்மு - காஷ்மீர். 
இந்தியா

காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 7 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திங்கள்கிழமை மீண்டும் திறந்தது.

முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த ஒருங்கிணைந்த தலைமையகக் கூட்டத்தில் முழுமையான பாதுகாப்பு மறுஆய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பிறப்பித்த உத்தரவின் பேரில் சுற்றுலா தலங்கள் திங்கள்கிமை திறக்கப்பட்டன.

பிகாரில் முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

இதுகுறித்து துணைநிலை ஆளுநா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தற்காலிகமாக மூடப்பட்ட காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவுகளில் உள்ள கூடுதல் சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

ஏற்கெனவே ஜூன் மாதத்தில் பஹல்காமின் சில பகுதிகள் உள்பட 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஏழு சுற்றுலா தலங்களை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The Jammu and Kashmir administration on Monday threw open seven tourist spots in the valley that were closed in the wake of the April 22 Pahalgam terror attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் பலி, 22 பேர் படுகாயம்

கரூரில் நெரிசலில் காயம்- 51 பேர் டிஸ்சார்ஜ்

கரூர் பலி: யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை! - Nirmala Sitharaman | TVK Stampede

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.79ஆக நிறைவு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஓய்வு!

SCROLL FOR NEXT