சைதன்யானந்த் சரஸ்வதி 
இந்தியா

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது! டார்ச்சர் அறை கண்டுபிடிப்பு

தில்லி கல்வி மைய இயக்குநர் சைதன்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டு, மாணவிகளை டார்ச்சர் செய்ய பயன்படுத்திய அறை கண்டுபிடிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தில்லியில், தனியார் கல்வி மையத்தின் இயக்குநர் சைதந்யானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கல்வி மைய வளாகத்தில் இருந்த டார்ச்சர் அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சைதன்யானந்த் சரஸ்வதியின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதோடு, புகார் கொடுத்தவரை, வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக, சைதன்யானந்த் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சைதன்யானந்த், தனியார் கல்வி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது அலுவலகம், வாழும் இடம் உள்ளிட்டவற்றை அடையாளம் காட்டினார். அங்கிருந்து பல தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதே வளாகத்தில், மாணவிகளை டார்ச்சர் செய்ய பயன்படுத்திய அறை ஒன்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரது செல்போன் பாஸ்வார்டை கேட்டதற்கு, தான் மறந்துவிட்டதாகவும், பதற்றமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மாணவிகளை தொடர்புகொள்ள இந்த செல்போனை பயன்படுத்தியிருந்ததும், கல்வி மைய வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர் தலைமறைவாக இருந்தபோதும் தன்னுடைய செல்போனில் நேரடியாக கண்காணித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

அஜீத் பவார் உடல் தகனம்!

SCROLL FOR NEXT