மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பையிலிருந்து தில்லிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 762இல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் தில்லி விமானத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
முன்னதாக செப். 19 அன்று, மும்பையிலிருந்து ஃபூக்கெட்டுக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் இது புரளி என்று தெரியவந்தது.
இதையும் படிக்க: புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.