முகப்பு
இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வீடு, வாகனக் கடன் வட்டி குறையுமா?

ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ அறிவிப்பு...

Updated On : 8 ஏப்ரல், 2026 at 5:04 AM
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா - ENS
பகிர்:

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 'ரெப்போ ரேட்' எந்த மாற்றமுமின்றி 5.25% ஆகத் தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று(ஏப். 8) இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. 2026 - 27 ஆம் நிதியாண்டில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 5.25% ஆகத் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

Advertisement

இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமிருக்க வாய்ப்பு இல்லை.

அதேபோல வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடா் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு, வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறையாமல் அதே விகிதத்தில் தொடரும்.

நிலையான வைப்பு வசதி (எஸ்டிஎப்) மீதான வட்டி விகிதம் 5 சதவீதமாகவும் எம்எஸ்எப் வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவும் தொடர்கிறது.

உலகப் பொருளாதாரம் முன்பு இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் அதேநேரத்தில் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையிலே இருப்பதாகவும் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

summary

RBI MPC meeting: Central bank keeps repo rate unchanged at 5.25 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments