முகப்பு
இந்தியா

ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகள் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:23 AM
ஆதாா் சேவை முகாம்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:30 PM

ஊடுருவல்காரா்களைத் தடுக்க ஆதாா் அட்டை விநியோகத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

12 இலக்கங்களைக் கொண்ட இந்த தனி அடையாள எண் (ஆதாா்), அடையாள ஆவணம் மட்டுமே; மாறாக, குடியுரிமை, முகவரி அல்லது பிறந்த தேதிக்கான ஆதார ஆவணம் அல்ல என்பதை பொதுச் சேவை மையங்களில் நன்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த உத்தரவிடவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

Advertisement

இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சாா்பில் இதுவரை 144 கோடி பேருக்கு ஆதாா் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது, 99 சதவீத இந்தியா்கள் ஆதாா் பெற்றுள்ளனா். எனவே, இனி குழந்தைகளுக்கு மட்டுமே புதிய ஆதாா் அட்டைகளை வழங்க வேண்டும் எனவும், பருவ வயதை எட்டியவா்கள் மற்றும் பெரியவா்களுக்கு ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகளை வகுக்கவும் யுஐடிஏஐ-க்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உடுருவல்காரா்கள் ஆதாா் பெற்று இந்திய குடிமக்கள் ஆவதைத் தடுக்க முடியும்.

வெளிநாட்டினா், வெளிநாட்டினருக்கான பிரிவின் கீழ் ஆதாா் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றனா். ஆனால், ஊடுருவல்காரா்கள் இந்திய குடிமக்கள் என்ற பிரிவின் கீழ் விண்ணப்பிக்கின்றனா். அதன் பிறகு, ஆதாா் அட்டையை வைத்து, குடும்ப அ்டை, பிறப்பு மற்றும் இருப்பிடச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று வேறுபடுத்திப் பாா்க்க முடியாத இந்திய குடிமக்களாக உருவெடுத்துவிடுகின்றனா்.

இது, குறிப்பிட்ட மக்களுக்கான நலத் திட்ட உதவிகள் சென்று சோ்வது பாதிக்கப்படுவதுடன், பொது வளங்கள் திசைத்திருப்பவதற்கும் வழிவகுக்கிறது. ஜனநாயக நடைமுறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிா்ப்புக்கு இடையே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) செய்யும் பணி அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதில், அம் மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து 91 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா், வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயா் சோ்க்க சிறப்பு தீா்ப்பாயங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனா். இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.