அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்! மதியம் 1 மணிக்குள் 60% வாக்குப்பதிவு!
அசாமில் மதியம் 1 மணிக்குள் 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறித்து...
அசாம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதியம் 1 மணிக்குள் 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம், கேரளம் மற்றும் புதுவையில் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, அங்குள்ள வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில், காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது. இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட 2.5 கோடி வாக்காளர்கள் உள்ள அம்மாநிலத்தில் மதியம் 1 மணிக்குள் 59.63 வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, மதியம் 1 மணி நிலவரப்படி அதிகப்படியாக கோல்பாரா மாவட்டத்தின் துத்னோயில் 66.11 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக திப்ருகாரில் 50.85 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இத்துடன், ஆளுங்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நேரடியாகப் போட்டி நடைபெறும் இந்தத் தேர்தலில் 722 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.