சிம்லாவில் 9.28 கிலோ போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது
சிம்லாவில் 9.28 கிலோ அபின் போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் 9.28 கிலோ அபின் போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், நர்கந்தா பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொருட்களுடன் சிலர் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்புப் பிரிவு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனைச் சாவடி அமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் சோதனைக்காக நிறுத்தப்பட்டது. பின்னர் வாகனத்தை முழுமையாக சோதனையிட்டதில், அபினி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டவர்கள் சக்ர பகதூர் (25), என் பகதூர் என்கிற ராஜு (41) மற்றும் மோகன் சாஹி (44) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போதைப்பொருள் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Three Nepalese nationals were arrested with 9.28 kg of opium and Rs 12 lakh in the Narkanda area here, police said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.