முகப்பு
இந்தியா

வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகளில் முதலீடுகள்!

அனைவருக்கும் வளர்ச்சி என்பதே அரசின் முக்கிய குறிக்கோள் என நிர்மலா சீதாராமன் பேச்சு...

Updated On : 1 பிப்ரவரி 2026, 11:23 am IST
நிர்மலா சீதாராமன் - படம் - பிடிஐ
பகிர்:

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.

இதில் அவர் பேசியதாவது,

அனைவருக்கும் வளர்ச்சி என்பதே அரசின் முக்கிய குறிக்கோள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்கிறோம். சீர்த்திருத்தங்களால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதுவரை 350 சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

3 முக்கிய கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர்,

வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகள் முன்மொழியப்பட்டதாகக் கூறினார்.

7 எல்லைப்புறத் துறைகளில் உற்பத்தியை அளவிடுதல்.

பாரம்பரிய தொழில்துறை துறைகளை புத்துயிர் பெறுதல்.

சாம்பியனான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை உருவாக்குதல்

உள்கட்டமைப்பு உந்துதல்

நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல்

நகரப் பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல் என வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 6 துறைகள் முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.