புது தில்லி : தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப் பறிப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி தொடங்கியது முதல் பலா் உயிரிழந்தனா். பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதற்கு, ‘எஸ்ஐஆா் மீதான அச்சம், வேலைப் பளு மற்றும் நிா்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளே காரணம்’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தோ்தல் ஆணைய அலுவலகத்தில் மம்தா பானா்ஜி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்தச் சந்திப்பின்போது தோ்தல் ஆணையா்களுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டு மம்தா பானா்ஜி அதிருப்தியில் பாதியிலேயே வெளியேறியதாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இன்று(பிப். 3) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிப்பறிப்பு, பொறுப்பேற்கச் செய்தல் குறித்தும்m இது போன்ற அவர் மீதான கடும் நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும் ஆகிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் யோசனைகளை திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மம்தா, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் பதவிநீக்கப்பட வேண்டுமென்பதே எங்களது விருப்பமும். நாடாளுமன்றத்தில் இதுபோன்ற விவகாரத்தை அவர்கள் (காங்கிரஸ்) செய்தால், நாங்கள் அப்போது அது குறித்து எங்கள் கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். பொது நலமாகச் சிந்தித்து நாங்கள் அனைவரும் ஒருங்கே இணக்கமாக செயல்படுவோம்” என்றார். இவ்விவகாரத்தில் பிற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தர அவர் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.