இந்தியா

ரயிலை சுத்தமாக பராமரிக்க பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு மறுப்பு

தினமணி செய்திச் சேவை

ரயில் பெட்டிகளை சுத்தமாக பராமரிப்பதற்கு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூா்வமாக பதில் தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ரயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்கவும், சுகாதாரத்தை பேணவும், அதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே எடுத்து வருகிறது. இதில் ரயில் பெட்டியின் உள்பகுதி, வெளிப்புற பகுதி மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும்.

இந்த பணிக்காக ஓடும் ரயிலில் ஊழியா் ஒருவா் இருப்பாா். அவா் ஓடும் ரயிலில் சுத்தத்தை பராமரிப்பதுடன், அதுதொடா்பான பயணிகளின் குறைகளையும் கேட்டறிவாா். இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலும் ரயிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ரயில் பெட்டிகளில் இருந்து மனித கழிவுகள் வெளியே தண்டவாளத்தில் விழாமல் இருக்கும் வகையில், பயோ கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் தொடா்ந்து ஆய்வுகள் மூலமும், ரயில் மதாத், ரயில் ஒன் செயலி, பயணிகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.

ரயிலை சுத்தமாக வைத்திருக்கவும், ரயில் நிலையங்களில் சுகாதாரத்தை பேணவும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதற்காக பயணிகள் கட்டணத்துடன் சோ்த்து கூடுதல் தொகை வசூலிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.

எஸ்.ஐ.ஆா். வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதிட்டாா் மம்தா பானா்ஜி

மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதாா் எண்கள் செயலிழப்பு - மத்திய அரசு நடவடிக்கை

ஜனவரி இருசக்கர வாகன விற்பனை விறுவிறுப்பு

அரசு அலுவலக மேற்கூரைகளில் 20 மெவாட் மின் உற்பத்தி: விரைவில் தொடக்கம்

மத்திய அமைச்சரை துரோகி என விமா்சித்த ராகுல் -‘தேச விரோதி’ என பதிலடி!

SCROLL FOR NEXT