கோப்புப்படம்.  
இந்தியா

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் சக மாணவனைச் சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை!

சட்டக் கல்லூரியில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாபின் தர்ன் தாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த மாணவர் சக மாணவனைச் சுட்டுக் கொன்று, அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரின்ஸ் ராஜ் என்பவர் வகுப்பறையில் சந்தீப் கௌர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார். அதன்பின்னர், பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் ஜக்பீர் சிங் தெரிவித்தார்.

பிரின்ஸ் ராஜ் ஏன் சந்தீப் கௌர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தர்ன் தாரனில் உள்ள உஸ்மா கிராமத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளனர்.

வகுப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிந்தீப் கௌர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பிரின்ஸ் ராஜ் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

A first-year law college student in Punjab's Tarn Taran district allegedly shot dead a fellow student on Monday and later shot himself with the same weapon, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்காட்லாந்து அதிரடி! இத்தாலிக்கு 208 ரன்கள் இலக்கு!

கான்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

மகாராஷ்டிர தேர்தல்: பாஜக-சிவசேனை கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT