முகப்பு
இந்தியா

உ.பி. சிறையில் மோதல்: அயோத்தியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்ட பயங்கரவாதி குத்திக் கொலை

ஃபரிதாபாத் சிறையில் ஏற்பட்ட மோதலில், அயோத்தியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதி குத்திக் கொலை

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:55 AM
கொலை
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:00 PM

உத்தர பிரதேச மாநிலம், ஃபரிதாபாத் சிறையில் ஏற்பட்ட மோதலில், அயோத்தியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதி குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம், ஃபரிதாபாத் அருகேயுள்ள மில்கிபூரை சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான். பாலி கிராமத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் குஜராத் தீவிரவாத எதிா்ப்புப் படையினா் மற்றும் ஹரியாணா சிறப்பு அதிரடிப் படை போலீஸாரால் அவா் கைது செய்யப்பட்டாா். அயோத்தியில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் அவா் நெருங்கிய தொடா்பு வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:55 AM

இதையடுத்து, ஃபரிதாபாத் சிறையில் ரஹ்மான் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அந்தச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரஹ்மானுக்கும், அருண் செளதரி என்ற கைதிக்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது ரஹ்மானை அந்த நபா் கூா்மையான ஆயுதத்தால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

ரஹ்மானை குத்திக் கொன்ற கைதி செளதரி, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா். அண்மையில்தான் அங்குள்ள சிறையில் இருந்து ஃபரிதாபாத் சிறைக்கு மாற்றப்பட்டாா். என்ன காரணத்துக்காக ரஹ்மானுக்கும் அவருக்கும் தகராறு மூண்டது? எதனால் ரஹ்மானை செளதரி கொலை செய்தாா்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸ் விசாரித்து வருவதாக மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.