இந்தியா

இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவது முதல்முறை! கிரண் ரிஜிஜு ராஜிநாமா செய்ய வேண்டும்!

அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள விடியோ பற்றி காங்கிரஸ் எம்.பி. கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவது இதுவே முதல்முறை என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்ற வீடியோக்களையும் வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறைக்குள் சென்று வாக்குவாதம் செய்தது ஆகிய விடியோக்களை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி கூறுகையில்,

"கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்திற்கு புறம்பான பணிகளைச் செய்து வருகிறார். இதற்காக அவர் விரைவில் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.

நாடாளுமன்ற வரலாற்றில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஒருவர் இதுபோன்று செய்ததை நான் பார்த்ததில்லை. எம்.பி.க்கள் சார்ந்த விடியோக்களை தனிப்பட்ட முறையில் வெளியிடுவதை நான் பார்ப்பது இதுவே முதல்முறை. அவர் மற்ற வீடியோக்களையும் வெளியிட வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 'எடிட்' செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட்டு மக்களை அவமதிக்கும் இந்த செயலை என்னவென்று சொல்வது?

அவர்களுக்கு காங்கிரஸின் வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்பது, மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த கோழைகள் பதில்களை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

விடியோ விவகாரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்த நிலையில், பிப். 4 அன்று மக்களவையில் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை.

பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை எழுப்பியது.

இதுதொடர்பான விடியோக்களை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டு வருகிறார்.

மக்களவையில் பிரதமரின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஆரப்பாட்டம் நடத்திய விடியோவைப் பகிர்ந்திருந்த அமைச்சர், இப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி. க்கள் நுழைந்து வாக்குவாதம் செய்வது போன்ற ஒரு விடியோவை இன்று வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பி.க்கள், அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் அங்கு இருக்கின்றனர்.

விடியோ பற்றி அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இது, 20 - 25 காங்கிரஸ் எம்.பி.க்கள், அவைத்தலைவரின் அறைக்குள் நுழைந்து, அவரை திட்டியதுடன் பிரதமரை மிரட்டியபோது ​​ஒரு காங்கிரஸ் எம்.பி. சட்டவிரோதமாக எடுத்த விடியோ கிளிப்.

எங்கள் கட்சி விவாதம், உரையாடலில் நம்பிக்கை கொண்டுள்ளது. உடல் ரீதியாக எம்.பி.க்கள் அச்சுறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

First time have seen parliamentary affairs minister release videos from the Chamber: Congress MP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் வெளியானது தலைவர் தம்பி தலைமையில்!

புதிய பிரதமர் அலுவலகம் "சேவா தீர்த்": நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியீடு!

ராகுலின் கேள்விகளுக்கு பாஜகவால் பதிலளிக்க முடியுமா? - கே.சி. வேணுகோபால் கேள்வி

#savafg | பற்றிக் கொண்ட டி20 உலகக் கோப்பை தீ: விருந்தளித்த SA v AFG ஆட்டம் | T20 World Cup | #t20wc

SCROLL FOR NEXT