முகப்பு
இந்தியா

குருகிராமில் திருமண விழாவில் எலக்ட்ரீஷியன் சுட்டுக்கொலை

பட்டோடி அருகே நடந்த திருமண விழாவில் மின்சாரம் பொருத்துவது தொடர்பான தகராறில் எலக்ட்ரீஷியன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 9:24 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

ஹரியாணாவின் பட்டோடி அருகே நடந்த திருமண விழாவில் மின்சாரம் பொருத்துவது தொடர்பான தகராறில் எலக்ட்ரீஷியன் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உத்தர ப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த பர்கத், ஸ்ரீ ஷியாம் டென்ட் ஹவுஸில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். டென்ட் ஹவுஸின் உரிமையாளரான விகாஸ், ரன்சிகா கிராமத்தில் ராமானந்தின் மகன் அமன்தீப்பின் திருமணத்திற்கு கூடாரம் அமைக்கும் பணியை மேற்கொண்டார்.

வியாழக்கிழமை, பர்கத் வேலையில் இருந்தபோது விளக்குகள் பொருத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. தோட்டாக்களில் ஒன்று பர்கத் மீது பாய்ந்தது. இதில் அவர் தரையில் சரிந்து விழுந்தார்.

Advertisement

Advertisement

உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பர்கத்தின் மாமனார் அளித்த புகாரின் அடிப்படையில், அமன்தீப், சாஹில் மற்றும் ஹர்ஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ஹர்ஷ் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, ​​திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் போது, ​​உரிமம் பெற்ற துப்பாக்கியை தனது மாமா தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அது தற்செயலாக வெடித்துவிட்டதாகவும் ஹர்ஷ் கூறினார். நாங்கள் உண்மைகளை சரிபார்த்து வருகிறோம். அமன்தீப் மற்றும் சாஹிலை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.

summary

An electrician was shot dead during a wedding ceremony near Pataudi after an alleged dispute over power installation, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.