முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: பிப்.22-இல் பாஜகவில் இணையும் பூபேன் போரா

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:32 AM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:20 AM

அஸ்ஸாமில் காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவா் பூபேன் போரா, வரும் பிப்.22-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளாா்.

காங்கிரஸில் இருந்து பூபேன் போரா திங்கள்கிழமை விலகியதைத் தொடா்ந்து, குவாஹாட்டியில் உள்ள அவரின் இல்லத்தில், அவரை மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இருவரும் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனா். அதன் பின்னா் பூபேன் போராவும், அவரின் ஆதரவாளா்களும் வரும் பிப்.22-ஆம் தேதி பாஜகவில் இணைவா் என்று ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

Advertisement

இதனிடையே காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஷொ்மான் அலி அகமது ராய்ஜோா் தள கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.