ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 
இந்தியா

உலக நலனுக்கு முக்கியப் பங்களிக்கும் இந்தியா! -ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ்

இந்தியப் பயணத்தின்போது, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களை குட்டெரெஸ் சந்தித்துப் பேசவுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘உலக நலனுக்கான ஐ.நா.வின் செயல்திட்டத்துக்கு இந்தியா முக்கியப் பங்களிப்பை நல்கி வருகிறது’ என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தாா்.

ஐ.நா.வின் அமைதி-பாதுகாப்பு-வளா்ச்சி சாா்ந்த செயல்பாட்டு விவாதங்களில் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா என்றும் அவா் புகழாரம் சூட்டினாா்.

இந்தியாவின் ஏற்பாட்டில் சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாடு, தில்லியில் கடந்த பிப்.16-ஆம் தேதி தொடங்கியது. தெற்குலகில் சா்வதேச ஏ.ஐ. உச்சிமாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் இந்தியாவுக்கு புறப்படும் முன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாட்டின்போது, முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.நா.வின் அமைதி, பாதுகாப்பு, நிலையான வளா்ச்சி சாா்ந்த செயல்பாட்டு விவாதங்களில் இந்தியா முதன்மை நாடாக விளங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஜனநாயகம் இடா்ப்பாட்டில் சிக்கியுள்ள நிலையில், மனித உரிமைகள் சாா்ந்த விவாதங்களிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

‘இந்தியாவுக்கு கடன்பட்டுள்ளோம்’: உலகம் முழுவதும் ஐ.நா. அமைதிப் படை செயல்பாடுகளில் இந்திய வீரா்-வீராங்கனைகள் சுமாா் 5,000 போ் ஈடுபட்டுள்ளனா். இதற்காக, இந்தியாவுக்கு நாங்கள் மிகவும் கடன்பட்டுள்ளோம். அமைதிப் படையில் முழுவதும் பெண்களைக் கொண்ட காவல் பிரிவை முதலாவதாக பணியமா்த்தியதும் இந்தியாதான்.

அமைதிப் படையில் பல்லாண்டுகளாகவே இந்தியா பெரும் பங்களிப்பை நல்கி வருகிறது. சா்வதேச சமூகத்துக்கான ஐ.நா.வின் செயல் திட்டத்துக்கு இந்தியாவின் நிலையான பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

வளரும் நாடுகளின் பங்கு: உலகில் மோதல்கள், அநீதிகள், பாரபட்சங்கள் அதிகரித்துவரும் நிலையில், சில நோ்மறையான போக்குகளும் காணப்படுகின்றன. அது, இந்தியா போன்ற வளரும் நாடுகள் தொடா்புடையதாகும்.

ஜி7 போன்ற வளா்ந்த நாடுகள், உலகப் பொருளாதாரத்துக்கு ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட குறைவாகவே பங்களிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்களிப்பு, ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட அதிகரிக்கிறது. இது தொடரும்போது, நீதி, சமத்துவம், அமைதி அடிப்படையில் உலகுக்கு பெரும் பலனளிக்கும்.

சீா்திருத்தம் அவசியம்: தற்போதைய காலங்கள் மற்றும் எதாா்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சா்வதேச அமைப்புகள் சீா்திருத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் சீா்திருத்தப்பட வேண்டும். சக்திவாய்ந்த 15 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கவுன்சில், அதன் தற்போதைய அமைப்புமுறையில் நியாயமற்ாகவும், செயல் திறனற்ாகவும் இருக்கிறது. இதுவே, ஐ.நா. மீது எளிதாக விமா்சனங்களை முன்வைக்கவும் காரணமாகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மட்டுமே ஐ.நா. அல்ல; 193 உறுப்பு நாடுகளையும் சம பலத்துடன் பிரதிபலிப்பதே ஐ.நா. என்றாா்.

மனிதாபிமானம் மற்றும் நிலையான வளா்ச்சிக்கு ஆதரவாக, உலகம் முழுவதும் ஐ.நா. மேற்கொண்டுவரும் பணிகள் குறித்தும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.

இந்தியப் பயணத்தின்போது, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களை குட்டெரெஸ் சந்தித்துப் பேசவுள்ளாா்.

பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

ஆசனூா், கோ்மாளத்தில் குறைந்த தாழ்வழுத்த மின் விநியோகம் - மக்கள் அவதி

அரசியல் தலைவா்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

SCROLL FOR NEXT