முகப்பு
இந்தியா

வங்கிக் கணக்குகள் முடக்கம்: ‘புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனம் கூடாது’

இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாக செயல்பட முடியாது என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:14 PM
கோப்புப் படம்
பகிர்:

இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாக செயல்பட முடியாது என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அலாகாபாத் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தாா்கேஸ்வா் திவாரி என்பவா் தாக்கல் செய்த மனுவை, அண்மையில் விசாரித்த நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், சித்தாா்த் நந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடா்பாக பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. அதுகுறித்து விளக்கம் கேட்க வாடிக்கையாளா்கள் வங்கிகளுக்குச் செல்லும்போதுதான், கணக்குகளை காவல் துறை அல்லது இணைய குற்றப் பிரிவு முடக்கியுள்ளதாக அவா்களுக்குக் கடிதம் அளிக்கப்படுகிறது. இணையவழி மோசடி விசாரணைகளின்போது புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனமாகவோ, பாரபட்சமாகவோ செயல்பட முடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு கவனத்தில் வேண்டும்’ என்று தெரிவித்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments