முகப்பு
இந்தியா

வடக்கு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

வடக்கு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:56 PM
- IANS
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:52 PM

வடக்கு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:52 PM

இந்த நிலையில் வடக்கு காஷ்மீரில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "(வடக்கு காஷ்மீர்) குப்வாராவின் நவ்காம் செக்டரில் உள்ள டிஎம்ஜி (டூட் மர் கலி) என்ற இடத்தில் நண்பகலில் ​​இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் சிறிய ரக ஆயுதங்களால் சுட்டன என்று தெரிவித்துள்ளனர்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 6:52 PM

இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நின்றது என்றும் மேலும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலால் எல்லையில் பதற்றம் நிலவியது.

summary

Pakistan violated the ceasefire along the Line of Control (LoC) in Jammu and Kashmir's Kupwara district on Friday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.