பிரதமர் மோடி - ராகுல் காந்தி கோப்புப் படம்
இந்தியா

மோடி, ராகுல் புத்தாண்டு வாழ்த்து!

பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் புத்தாண்டு வாழ்த்து பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

புத்தாண்டு வாழ்த்து: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,

“அனைவருக்கும் 2026 அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்.

உங்கள் முயற்சிகளில் வெற்றியும், நீங்கள் செய்யும் அனைத்திலும் நிறைவும் கிடைக்கட்டும். நமது சமூகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பதிவு

“அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொண்டு வரட்டும்.” என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Modi and Rahul extend New Year greetings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூ யார்க் மேயர் மம்தானியின் அதிகாரம் என்ன? டிரம்ப்புக்கு தலைவலி ஆவரா?

அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் வெளியீட்டுத் தேதி!

மனிதன் தெய்வமாகலாம்..! செல்வராகவனின் புதிய படம்!

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

SCROLL FOR NEXT