மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை 
இந்தியா

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை!

மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 நல்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் நக்லைட்டுகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுக்மாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மங்டு (டிவிசிஎம்) உள்பட 12 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பிஜப்பூர் மாவட்டம், பசகுடாவில் உள்ள ககன்பள்ளி கிராமக் காடுகளில் ஹுங்கா மட்காம் உள்பட இரண்டு மாவோயிஸ்ட் உறுப்பினர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஜாப்பூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நக்சலைட்டுகளின் உடல்களுடன் ஒரு எஸ்எல்ஆர் துப்பாக்கி மற்றும் ஒரு 12 போர் துப்பாக்கி மீட்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டு, சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த தனித்தனி மோதல்களில் 285 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Security forces killed 14 Naxalites, including wanted ultras Mangtu (DVCM) and Hunga Madkam, in separate encounters in Chhattisgarh's Sukma and Bijapur districts in the Bastar region on Saturday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"எனது தந்தை பேருந்து நடத்துனர். என் தாய் பீடி சுற்றுகிறார்!" இன்பா ஐபிஎஸ் நெகிழ்ச்சி!

வெனிசுவேலாவின் நிலை நாளை இந்தியாவுக்கும் ஏற்படும் : காங்கிரஸ்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.90.18ஆக நிறைவு!

ONGC எண்ணெய் கிணறு தீ விபத்து: 2-வது நாளாக பற்றி எரியும் தீ!

காற்றில் ஊசலாடிய ரூ. 815 கோடி செலவில் அமைக்கப்பட்ட ரோப்வே!

SCROLL FOR NEXT