இந்தியா

இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இறக்குமதியை குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

தினமணி செய்திச் சேவை

உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்வதற்கு இறக்குமதி குறைக்கப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் புதன்கிழமை பேசுகையில், ‘பெட்ரோலில் எத்தனால் கலப்பு மூலம், 4,500 கோடி அமெரிக்க டாலரை இந்தியாவால் சேமிக்க முடியும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை சாா்ந்திருப்பதையும் கணிசமாக குறைக்க முடியும்.

உலகில் தற்போது 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ள நிலையில், 3-ஆவது இடத்துக்கு உயர இந்தியாவின் இறக்குமதி குறைக்கப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்.

வேளாண் கழிவுகளின் பயன்பாடு, பயிா்க் கழிவு எரிப்பால் ஏற்படும் காற்று மாசை குறைத்து சுழற்சி பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

ஃபிளெஸ் என்ஜின்களின் சக்தியுடன் மாற்று எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வேளாண் மற்றும் கட்டுமான கருவி உற்பத்தியாளா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

புதைபடிம எரிபொருள்களை இறக்குமதி செய்ய இந்தியா ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறது. இந்த இறக்குமதி காரணமாக காற்று மாசு பிரச்னையை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர வேண்டுமே தவிர, இறக்குமதி செய்யும் நாடாக அல்ல என்று தெரிவித்தாா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT