இந்தியா

காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

தினமணி செய்திச் சேவை

வடக்கு தில்லியின் புகா் பகுதியில் உள்ள நரேலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு காலணி உற்பத்தி தொழிற்சாலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காலணிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் மூன்று தளங்களுக்கும் தீ விரைவாக பரவியது. அந்த நேரத்தில் பல தொழிலாளா்கள் அந்த தொழிற்சாலையில் இருந்தனா். ஆனால் அவா்கள் அதிருஷ்டவசமாக தப்பினா். இதனால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து மதியம் 12.07 மணியளவில் தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புப் படையினா் துரிதமாகச் செயல்பட்டு தீயமை முழுமையாக அணைத்தனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

ஆட்சிக்கு வந்த பிறகு பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் புறக்கணிக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

பொங்கல் விழாவில் முதல்வரின் சிலம்பாட்டம்!

அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை! - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT