பினராயி விஜயன் கோப்புப் படம்
இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக ஜன.12-இல் கேரள முதல்வா் ‘சத்தியாகிரகம்’!

வரும் ஜன.12-ஆம் தேதி கேரள முதல்வா் பினராயி விஜயன் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, வரும் ஜன.12-ஆம் தேதி கேரள முதல்வா் பினராயி விஜயன் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளாா்.

இதுகுறித்து மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் சனிக்கிழமை கூறுகையில், ‘ஜன. 12-ஆம் தேதி மாநில தலைநகா் திருவனந்தபுரத்தில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற உள்ளது.

மேலும், மாநில அரசு மேற்கொண்டுள்ள மக்கள் வளா்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்.1 முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன.

சமுதாயத்தில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி மற்றும் பாஜக செய்யும் முயற்சிகளுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் நினைவு நாளான வரும் ஜன.30-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா்கள், இளைஞா் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்’ என்று தெரிவித்தாா்.

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

SCROLL FOR NEXT