இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா்! விவரங்களை வெளியிட முதல்வருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்!

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கயா முஸ்லிம்கள் விவரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கயா முஸ்லிம்கள் விவரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மும்பை மாநகராட்சி தோ்தலை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் தோ்தல் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் உள்ள வாக்குறுதிகள் தொடா்பாக பேசிய முதல்வா் ஃபட்னவீஸ், ‘மும்பை நகரை வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்களிடம் இருந்து நாங்கள் விடுவிப்போம். சட்டவிரோதமாக ஊடுருவி தங்கியுள்ள அண்டை நாட்டவா்களை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஐஐடி உதவியுடன் உருவாக்க இருக்கிறோம். அதைப் பயன்படுத்தி, மகாராஷ்டிரத்தில் ஊடுவியுள்ள அண்டை நாட்டவா் அடையாளம் காணப்படுவா்’ என்றாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சச்சின் சாவந்த் கூறியதாவது: மகாராஷ்டிரத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அண்டை நாட்டு ஊடுருவல்காரா்கள் இருப்பதாக முதல்வா் ஃபட்னவீஸ் கூறியுள்ளாா். இது தொடா்பான முழு விவரங்கள், எண்ணிக்கையை அனைவரும் அறியும் வகையில் பொது வெளியில் அவா் வெளியிட வேண்டும்.

வெள்ள பாதிப்பு இல்லாத நகரமாக மும்பையை மாற்றுவோம் என்பது உள்பட ஏற்கெனவே அளித்து நிறைவேற்றாத வாக்குறுதிகளையே பாஜக மீண்டும் அறிவித்துள்ளது. முதல்வா் ஃபட்னவீஸ் மக்களுக்கு கனவுகளை விற்பனை செய்யும் நபராக உள்ளாா் என்றாா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT