கேரள மக்களை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிகளின் (யு.டி.எஃப்) வாக்கு வங்கியாக இஸ்லாமியர்களே உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஜன. 11) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்துகொண்டு பேசியதாவது:
ஜமாத்-இ-இஸ்லாமி, பீப்பள்ஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளிடமிருந்து கேரளத்தை இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்களா? அவர்களால் அது முடியாது. இஸ்லாமிய அமைப்புகளே அவர்களுக்கு வாக்கு வங்கிகளாக உள்ளது. அதனால், அவர்களுக்கு எதிராக எல்.டி.எஃப்., மற்றும் யு.டி.எஃப்., எதையும் செய்யாது.
பிரித்தாளும் அவர்களின் கொள்கையில் இருந்து கேரளத்தை யாரேனும் காப்பாற்ற வேண்டுமென்றால், அது பாஜகவால் மட்டுமே முடியும். முத்தலாக்கிற்கு பாஜக தடை விதித்தது. ஆனால், எல்.டி.எஃப்., மற்றும் யு.டி.எஃப். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
600 கிறிஸ்தவ மற்றும் ஹிந்து குடும்பங்களுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலம் வக்ஃப் வாரியம் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் கைகளில் உள்ளது. பிரித்தாளும் கொள்கைக்கு எதிரான செயல்பட்டு கேரளத்தைக் காப்பாற்ற எல்.டி.எஃப்., மற்றும் யு.டி.எஃப்பால் முடியாது.
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் அரசு செயல்படும் விதத்தை விமர்சித்த அமித் ஷா, ஹிந்து கோயில்களை நிர்வகிக்கக் கூட அரசால் முடியவில்லை என விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.