பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன்கள் எல்லைப் பகுதிகளில் தென்பட்டதையடுத்து, அந்நாட்டுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுவித்துள்ளது.
அண்டை நாட்டு எல்லைகளில் டிரோன்களின் அத்துமீறிய ஊடுருவல்களை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தானின் டிரோன்கள் நேற்றிரவு தென்பட்டன. இது தொடர்பாக பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, ஜம்மு - காஷ்மீரில் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான சூழல் இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூறினார்.
ராணுவ வீரர்கள் குழுக்களாக ஆங்காங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தரைவழித் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தென்பட்ட பாகிஸ்தானின் டிரோன்கள் அந்நாட்டு பாதுகாப்பு டிரோன்கள் என்றே நம்புகிறோம். நமக்கு எதிரான செயல்களில் அவை ஈடுபடுகின்றனவா? என கண்காணித்தோம்.
பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் வகையிலான வாய்ப்புகள் எல்லைப் பகுதிகளில் உள்ளனவா? என கண்காணிப்பதற்காகவும் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரவாதிகள் எல்லைகளில் ஊடுருவி உள்ளே நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.