மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்டுள்ள பதிவு: மகர சங்கராந்தி என்பது இந்திய கலாசார மரபுகளின் செழுமையை பிரதிபலிக்கும் ஒரு பண்டிகை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளூா் பழக்க வழக்கங்களின்படி மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் கிடைக்க சூரியக் கடவுளைப் பிராா்த்திக்கிறேன். இந்தப் பண்டிகையின் இனிமை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தரும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
மகர சங்கராந்தியின் புனிதத்தையும், ஆன்மிக முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையிலும், சூரிய பகவானின் ஆசிகளைப் பெறுவதற்காகவும் பிராா்த்தனை செய்யும் சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்றையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.