ஒடிஸாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசினார். ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஒடிஸாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நவீன் பட்னாயக்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
நட்பு ரீதியான சந்திப்பாக இது அமைந்திருந்ததாக அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுடன் கூறிச் சென்றார். ஏழைகளின் வாழ்வாதாரம் மேம்பட பட்நாயக் தொடர்ந்து பாடுபட்டார். “பட்நாயக் ஆட்சியில் நடைபெற்ற முன்னேற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்தியாவின் மூத்த தலைவர்களுள் பட்நாயக்கும் ஒருவர். நாங்கள் இருவரும் இப்போது பாஜகவை எதிர்த்து போராடுகிறோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.