ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தகவலின்பேரில், ஜன. 7-ல் பிலாவர், கலாபான், தானு பரோல், கமாத் நல்லா வனப்பகுதியில் பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பில்லாவரின் காளிகாட் மற்றும் கலாபான் பகுதிகளில் இன்று தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது.
இன்றைய தேடுதல் நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாத மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இடங்களில் பல்வேறு பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.
சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் எண்ணெய், சார்ஜ் வயர், கையுறைகள், சமையல் பாத்திரங்கள், காலியான எண்ணெய் கலன்கள், நெகிழிப் பைகள், போர்வைகள், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் தாள்கள், டார்ச் லைட் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.