இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மாசடைந்த குடிநீரைக் குடித்த பலர் பலியான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்தூரின் பகீரதபுரத்தில் நர்மதா ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை குடித்த உள்ளூர்வாழ் மக்களுக்கு, கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
பாம்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் பார்த்தார். அவர்களது குடும்பத்தினரிடம், உடல்நலம் தேறி வருவது குறித்து கேட்டறிந்தார். சில மணி நேரம் அவர்களது குடும்பத்தினரிடம் ராகுல் காந்தி உரையாடினார்.
மேலும், மாசடைந்த குடிநீர் விநியோகிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று, அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் நேரில் சந்தித்து பேசுகிறார். பிறகு, இந்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து அவர் இன்று தில்லி திரும்புகிறார்.
இந்தூரின் பகீரதபுரத்தில் நர்மதா ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை குடித்த உள்ளூர்வாழ் மக்களுக்கு, கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சுகாதாரமான நகரம் என அறியப்படும் இந்தூரில் நேரிட்ட இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் ராகுல் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.