எல்லை விவகாரம் உள்பட தேசிய பாதுகாப்பு குறித்த எந்தவொரு விஷயத்திலும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு ஒத்துழைத்ததில்லை என மமதா பானர்ஜி ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ஊடுருவல்காரர்களுக்கு அனுமதியளித்து தேசிய பாதுகாப்பில் விளையாடுவதாகவும், இத்தகைய காட்டாட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்திற்குட்பட்ட சிங்குர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான 15 ஆண்டுகால மகாஜங்கிள்ராஜ் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே மாநில மக்களின் விருப்பமாக உள்ளது. தவறான ஆட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் பொய்யான ஆவணங்கள் மூலம் மேற்கு வங்கத்தில் நிழைந்தது கண்டறியப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வெளியாட்கள் உள்நுழையாமல் இருப்பதை பாஜக உறுதி செய்யும்.
ஆனால், மாநில அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு எல்லைப் பகுதிகளில் வேலி அமைக்க மாநில அரசிடம் நிலம் கோரி கடிதம் எழுதப்பட்டது. பலமுறை இக்கடிதம் எழுதியும், மாநில அரசு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை.
மேற்கு வங்கத்திற்கும் இரட்டை என்ஜின் அரசு தேவைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மக்கள் மீது அக்கறை உள்ளதைப் போன்று மமதா பானர்ஜி நடிப்பதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது. மாநிலத்தின் மாஃபியா ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைக்கும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.